Uyir Nokku

உலகில் உயிர்கள் தோன்றுவதன் நோக்கம், மனிதன் என்ற நிலையிலிருந்து பக்குவமடைந்து, பதங்கள் எனும் உயர் நிலைகளுக்கு நகர்ந்து அங்கும் தகுதிகள் பெற்று இறைவனின் திருவடிகளில் இரண்டறக் கலந்த பிறப்புகளற்ற பேரானந்த நிலையை அடைவதே.

இந்நோக்கத்தை எல்லா உயிர்களும் அடையும் வகையில், உலகெங்கும் அந்தந்த பகுதியில் வாழும் மனிதர்களுக்கு, அவரவர் வாழ்வியலுக்கு ஏற்ப பல வழிமுறைகளை நம் முன்னோர் அனுபவத்தால் உணர்ந்து பகிர்ந்துள்ளனர்.

நம் தமிழகத்தில் உதித்த நம் முன்னோர், நம் உயிரின் நோக்கத்தை நாம் அடையும் பொருட்டு நம் வாழ்வியலுக்கு ஏற்ப ஒப்பற்ற ஓர் உன்னதமான பாதையை அமைத்து அருள் செய்தனர். இதற்கு “ சைவ சித்தாந்தம் ” எனப் பெயர் தந்தனர். இதில் பக்தி, ஞானம் என இரண்டு தன்மைகளை இயல்பாக கொண்டவர்களுக்கும் நல்வழி காட்டுகின்றனர்.

திருவருள் நம் ஐயா கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்கள் வழியாக, குருவாக வந்து நம்மை ஆட்கொண்டு அருள் செய்கின்றது என்றால் மிகையில்லை.

உலகெங்கும் இறை நம்பிக்கையும், இறைத் தேடலும் உள்ள நண்பர்கள் “உயிர் நோக்கு” என்ற “குரு லிங்க சங்கம” த்தில் இணைந்து உயிரின் நோக்கத்தை அடைவோம்.

திருவருளையும், குருவருளையும் போற்றி வணங்குவோம்.

சிவார்ப்பணம்

அன்புடன்,
கற்க அறக்கட்டளை.

All class videos

Every Wednesday

Class Timings : 6:30 am – 8:00 am